உலகம்செய்திகள்

தமது தலைவர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவிப்பு

Share
24 66fa85816604b
Share

தமது தலைவர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவிப்பு

லெபனானில் செயற்பட்டு வந்த தமது தலைவர், ஃபதே ஷெரிப் அபு அல்-அமீன், இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் இன்று (30.09.2024) கூறியுள்ளது.

PFLP‘ அமைப்பு என்பது இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கும் மற்றொரு போராளிக் குழுவாகும்.

ஈரானின் நட்பு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் தமது எதிர்ப்பை அதிகரித்து வரும் நிலையில், பெய்ரூட்டின் கோலா மாவட்டத்தை குறிவைத்து, அதன் இராணுவம் நடத்திய தாக்குதலில், தமது மூன்று தலைவர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன விடுதலைக்கான பொப்புலர் ஃப்ரண்ட் (PFLP) தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்டது என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எனினும், இஸ்ரேல் இராணுவத்திடம் இருந்து, இது தொடர்பில் உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் போராளிகள் மற்றும் யேமனில் உள்ள ஹவுதி போராளிகளுக்கு எதிராக இஸ்ரேலின் அதிகரித்து வரும் தாக்குதல்கள், மத்திய கிழக்கின் சண்டை, கட்டுப்பாட்டை மீறி இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவையும், எதிரி நாடான ஈரானையும் மோதல் ஒன்றில் ஈடுபட வைக்கக் கூடும் என்ற அச்சத்தை தூண்டியுள்ளது.

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை யேமனில் உள்ள ஹவுதி போராளிகளுக்கு எதிராகவும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

அத்துடன், லெபனானில், ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 105 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனானின் சுகாதார அமைச்சக தகவல்படி, கடந்த இரண்டு வாரங்களில் 1,000இற்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 6,000 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.

எனினும், இதில் எத்தனை பொதுமக்கள் உள்ளடங்கியுள்ளனர் என்று அமைச்சு கூறவில்லை.

இந்தநிலையில், ஒரு மில்லியன் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக லெபனான் அரசாங்கம் கூறியுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...