ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கிய இந்தியா

rtjy 138

ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கிய இந்தியா

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் இந்திய ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸாவை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஹமாஸின் இணையதளம் இந்திய ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பல்வேறு இஸ்ரேலிய சமூக ஊடகங்கள் செய்திகளை பகிர்ந்து வருகின்றன.

இந்நிலையில், இஸ்லாமிய ஹேக்கிங் குழுக்கள் இஸ்ரேலின் தேசிய மின்சார ஆணையத்தின் இணையதளத்தையும், கணக்காளர் ஜெனரலின் இணையதளத்தையும் ஹேக் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

எனினும், இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இந்த ஹேக்கிங் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதற்கமைய இந்த செயற்பாட்டுக்கு பதிலடி கொடுத்த இந்திய ஹேக்கர்கள் ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை எளிதாக கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version