23 655152bab5ade
உலகம்செய்திகள்

காசா மீதான தங்கள் பிடியை ஹமாஸ் இழந்து வருகிறார்கள் – இஸ்ரேலிய பாதுகாப்பு படை

Share

காசா மீதான தங்கள் பிடியை ஹமாஸ் இழந்து வருகிறார்கள் – இஸ்ரேலிய பாதுகாப்பு படை

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் காசா மீதான தங்கள் பிடியை இழந்து வருகின்றனர் என இஸ்ரேலிய பாதுகாப்புப்படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 11,078 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் என்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தனர்.

இதனையடுத்து தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலிய தற்காப்புப் படைகளின் தாக்குதலினால் ஹமாஸ் காசா மீதான தங்கள் பிடியை இழந்து வருகின்றனர் என IDF மூத்த செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கான்ரிகஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘கீழ்ப்படியாமை, கொள்ளையடித்தல் மற்றும் சமூக ஊடகங்களில் ஹமாஸ் மீதான முன்னோடி இல்லாத விமர்சனங்கள், காசாவில் ஹமாஸின் கட்டுப்பாடு நழுவி வருவதைக் காட்டுகின்றன.

எங்கள் மதிப்பீடு என்னவென்றால், அவர்களின் கட்டளை செயல்பாடுகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை திறம்பட நடத்துவதற்கும், மக்களை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்துவதற்கும் அவர்களின் திறன் ஆகியவை சவாலாக உள்ளன’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...