உலகம்
ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய மக்களின் எண்ணிக்கை
ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய மக்களின் எண்ணிக்கை
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் எண்ணிக்கையானது 36 நாட்களுக்கு பின்னர் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலின் இராணுவக்கட்டுப்பாடுகள் மிகுந்த எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதலை முன்னெடுத்தது ஹமாஸ் படைகள். உடனையே இஸ்ரேல் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில் 1,400 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் மாயமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டது.
இதனையடுத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசாங்கம் போர் பிரகடனம் செய்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆதரவுடன் காஸா மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இதில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 11,100 என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாலஸ்தீன இறப்பு எண்ணிக்கையில் தமக்கு சந்தேகம் இருப்பதாக நகையாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இறந்தவர்களின் அடையாள அட்டை இலக்கத்துடன், விரிவான அறிக்கை ஒன்றை பாலஸ்தீன அரசாங்கம் வெளியிட்டது.
அதன் பின்னர் இதுவரை ஜோ பைடன் இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் விவாதிப்பதில்லை. மேலும், இதுநாள் வரையில் ஹமாஸ் கொன்று குவித்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1,400 என பரவலாக குறிப்பிட்டு வந்த நெதன்யாகு அரசாங்கம் திடீரென்று, இறந்தவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டுள்ளது.
இதன் பின்னணி என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அக்டோபர் 7ல் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் எண்னிக்கை தற்போது 1,200 என கூறி வருகிறது. உண்மையில் இந்த எண்ணிக்கையும் உண்மை தானா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.
அத்துடன் இதுவரை சடலங்களை அடையாளம் காணும் பணி முடிவடையவில்லை எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது 200 எண்னிக்கை குறைந்துள்ளதன் காரணத்தையும் இஸ்ரேல் தரப்பு வெளியிடவில்லை.