இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதி பலி
இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி, மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளும் சேதம் அடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள், ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட அந்த அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி, விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலில் குறித்த அமைப்பைச் சேர்ந்த பலர் உயிரிழந்ததுடன், அங்கு அமைப்பின் அலுவலகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்ததுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் வெளியிட்ட செய்தியில், தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும், இந்த முகாமில் தங்கவில்லை. அப்பாவிகளை கொன்றதை மறைக்க இஸ்ரேல் வேறு செய்திகளை பரப்புகிறது எனத்தெரிவித்துள்ளது.
Comments are closed.