கார் ஓட்டும் திறன் கொண்டதாம் தங்கமீன்கள்!!!

Fish

கோல்ட்ஃபிஷ் என்று கூறப்படும் தங்க மீன்களுக்கு கார் ஓட்டும் அளவுக்கு திறன் இருக்கிறது.

இவ்வாறு இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரேலின் நெகேவில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து ஆய்வினை, மேற்கொண்டுள்ளனர்.

சிறிய வானகத்தின் மீது ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட தங்க மீன் இருக்கும் ஒரு தொட்டியை வைத்துள்ளனர்.

அத்துடன் அந்த மீன்களின் நகர்வுகள் எப்படி இருக்கிறது என்பதை அவதானிக்கும் வகையில் கேமரா அமைப்பும் பொருத்தப்பட்டது.

மீன்களின் நகர்வுக்கு ஏற்ப வாகனம் நகரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், பயிற்சியைத் தொடர்ந்து வாகனத்தை குறிப்பிட்ட இலக்கை நோக்கி குறித்த மீன்கள் இயங்கியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

#WorldNews

Exit mobile version