நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

arrested woman with handcuffs

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக பணியாற்றி வந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டுப் பெண் ஒருவர் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பெல்ஜியம் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்றாம் நாடு ஒன்றிற்காக உளவு பார்த்ததாகவும், குற்றவியல் அமைப்பு ஒன்றில் உறுப்பினராக இருந்ததாகவும் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக அரசு வழக்கறிஞர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தற்போது வெளிவிடப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version