ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள திஜாரா மேம்பாலத்தில், மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டிபிடித்துள்ளனர்.
சிறுமி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து அதிக இரத்தபோக்கு காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 13 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது.
இச்சம்பவம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் சிறுமி வீட்டில் இருந்து மேம்பாலம் வரும் வரை உள்ள அனைத்து சிசிடிவி வீடியோக்களையும் ஆய்வு செய்தோம் என்றும் இந்த விவகாரம் குறித்து ராஜஸ்தான் மாநில சிவில் உரிமைகள் டி.ஐ.ஜி ரவி தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி மேம்பாலத்தில் இருந்த 5-7 நிமிடங்களில் தான் இச்சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பான வழக்கை வேறு கோணத்தில் இருந்து ஆராய தொடங்கியிருக்கிறோம்.
இருப்பினும் வன்புணர்வுக்கு உள்ளான சாத்தியக்கூறுகள் குறைவாகத்தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#IndiaNews
Leave a comment