5 3
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மீது மர்ம ட்ரோன் கண்காணிப்பு – ரஷ்யா மீது சந்தேகம்

Share

ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது மர்ம ட்ரோன்கள் மூலம் ரஷ்யா கண்காணிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

ஜேர்மனியின் வடக்கு மாநிலமான Schleswig-Holstein-ல் உள்ள முக்கிய மருத்துவமனைகள், இராணுவ தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது மர்ம ட்ரோன்கள் கண்காணிப்பு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் கடந்த வாரம் Rendsburg-Eckernforde மாவட்டம் மற்றும் கீல் (Kiel) நகரத்தில் நிகழ்ந்துள்ளன.

ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் சபீன் சுட்டர்லின்-வாக் (Sabine Sütterlin-Waack), பல வகைகள் மற்றும் அளவுகளில் ட்ரோன்கள் பறந்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜேர்மனியின் Der Spiegel பத்திரிக்கையின் தகவலின்படி, செப்டம்பர் 25-ஆமா திகதி கீல் நகரில் உள்ள மின் நிலையம், பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் போர்க்கப்பல் தொழிற்சாலை மீது ட்ரோன்கள் பிறந்துள்ளன.

குறிப்பாக parent drone மற்றும் combined drone system போன்ற தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன்கள் மருத்துவமனை மீது பறந்ததாக உள்நாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், Mecklenburg-Western Pomerania மாநிலத்தில் உள்ள இரன்டுவ தளங்கள் மற்றும் கடற்படை கட்டுப்பாட்டு மையங்களிலும் ட்ரோன்கள் பறந்துள்ளன.

இந்த ட்ரோன் நடவடிக்கைகள் ரஷ்யாவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...