24 6599326c95c43
உலகம்செய்திகள்

குடும்பத்துடன் பலியான ஜேர்மன் ஹாலிவுட் நடிகர்! கடலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள்

Share

விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் குடும்பத்துடன் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (51). இவர் சிறிய ரக விமானம் ஒன்றில் தனது குடும்பத்துடன் பயணித்தபோது, பெக்வியாவின் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த நிலையில், கிறிஸ்டியன் ஆலிவர் (Christian Oliver) மற்றும் அவருடன் பலியானவர்களின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸார் இதுகுறித்து கூறுகையில், ‘ஆலிவர் குடும்பத்தின் சிறிய விமானம் அருகிலுள்ள சிறிய தீவுக்கு தனது பயணத்தைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சிக்கலை சந்தித்தது. நான்கு பேரின் உடல்கள் கடலில் இருந்து கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டு, பின்னர் மருத்துவ பயிற்சியாளரால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

உடல்கள் கடலோர காவல்படையின் கப்பலில் செயின்ட் வின்சென்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கிங்ஸ்டவுன் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன. மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
9 18
இலங்கைசெய்திகள்

2029 இல் சிறையில் அடைக்கப்படவுள்ள அநுரவின் 159 எம்.பிக்கள் : கம்மன்பில சீற்றம்

பிவிதுரு ஹெல உருமய (Pivithuru Hela Urumaya) கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பில அவர்கள்,...

8 19
இலங்கைசெய்திகள்

யாழ். கடற்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள்

யாழ்ப்பாணம் – குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுபாப்பு...

7 19
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி : பலர் கலக்கத்தில்

சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பில் விசேட விசாரணை பிரிவு இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்புக்கள் தொடர்பில்...

6 19
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர்...