11 13
உலகம்செய்திகள்

காசாவில் நிரந்தர அமைதி.. ஹமாஸின் அறிவிப்பால் புதிய திருப்பம்

Share

போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸின் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினை அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இரு திசைகளிலும் ரஃபா கடவைத் திறப்பதும் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிப்பதும் அடங்கும் என கலீல் அல்-ஹய்யா குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் இஸ்ரேலின் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளிக்கும் மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தத்தின் வளர்ச்சியில் முக்கிய தருணங்களில், ட்ரம்பின் தனிப்பட்ட தொடர்பு – ஒரு வலுவான கையாகவும், மென்மையான வழிகாட்டியாகவும் – முக்கிய பங்கு வகித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டத்தின் முதல் கட்டம், போரை நிறுத்தி, இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதாக ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ட்ரம்பின் குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒத்துழைப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஹமாஸின் மூத்த தலைவரும் அதனை உறுதிபடுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...