1716452376 1682 large
உலகம்செய்திகள்

அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணையை சோதனை செய்த பிரான்ஸ்; ரஷ்யாவுக்கு பதிலடி?

Share

அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணையை சோதனை செய்த பிரான்ஸ்; ரஷ்யாவுக்கு பதிலடி?

முதன்முறையாக, பிரான்ஸ் நாடு, அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது.

சமீபத்தில் ரஷ்யா அணு ஆயுத சோதனை மேற்கொண்ட விடயம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது பிரான்ஸ் மேற்கொண்டுள்ள ஒரு சோதனையும் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

முதன்முறையாக பிரான்ஸ் அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை செய்துள்ளது. ரஃபேல் ஜெட் விமானம் ஒன்று அந்த ஏவுகணையை ஏவியதாக பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான Sebastien Lecornu தெரிவித்துள்ளார்.

ரஷ்யா அணு ஆயுத சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து பிரான்சும் இந்த சோதனையை நடத்தியுள்ளதால், அது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையா என கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால், உக்ரைனுக்கு போர் வீரர்களை அனுப்புவதற்கு ஆதரவாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கருத்துத் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ரஷ்யா தான் அணு ஆயுத சோதனை நடத்துவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...

Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...