23 8
இந்தியாஉலகம்செய்திகள்

விசா, பணி அனுமதி பெறுவதை எளிமையாக்கும் பிரான்ஸ்: இந்தியர்களை ஈர்க்க திட்டம்

Share

இந்திய மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், விசா மற்றும் பணி தொடர்பான அனுமதிகள் பெறுவதை பிரான்ஸ் எளிமையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Sciences Po நிறுவனத்தில் புதிய இயக்குநரான Luis Vassy, சமீபத்தில் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, தங்கள் நாட்டில் விசா பிரச்சினை எல்லாம் கிடையாது, ஆகவே தங்கள் நாட்டுக்கு வரலாம் என சர்வதேச மாணவர்களை வரவேற்றது நினைவிருக்கலாம்.

இந்திய மாணவர்களை பிரான்சுக்கு கல்வி கற்க வரவேற்ற Vassy, தங்கள் பல்கலையில் பயிலும் மாணவர்களில் பாதிபேர் வெளிநாட்டவர்கள்தான் என்றும், பல்கலையில் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் கல்வி கற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

கனடா அமெரிக்கா போன்ற நாடுகள் சர்வதேச மாணவர்களுக்கு கெடுபிடி ஏற்படுத்துகின்றன, எங்கள் நாட்டில் அந்த பிரச்சினை எல்லாம் கிடையாது. அதனால், சர்வதேச மாணவர்கள் வந்து எங்கள் நாட்டில் கல்வி கற்கலாம் என்றும் கூறியிருந்தார் Vassy.

இந்நிலையில், பிரான்சிலுள்ள Lyon நகரத்தில் அமைந்துள்ள Emlyon Business School என்னும் கல்வி நிறுவனத்தின் தலைவரான இசபெல் (Isabelle Huault) என்பவரும், இந்திய மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், விசா மற்றும் பணி தொடர்பான அனுமதிகள் பெறுவதை பிரான்ஸ் எளிமையாக்கலாம் என்று தற்போது கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள், கனடாவுடனான தூதரக உறவில் பிரச்சினைகளுக்கு மத்தியில், இந்திய மாணவர்களை ஈர்ப்பதற்காக, விசா மற்றும் பணி தொடர்பான அனுமதிகள் பெறுவதை பிரான்ஸ் எளிமையாக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...