உலகம்செய்திகள்

தவறான சிகை அலங்கரிப்பு – சலூனுக்கு 2 கோடி ரூபா அபராதம்!

Share
242411892 118133307260160 8040810370804255339 n
Share

இந்தியாவின் டில்லியிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் உள்ள சலூன் ஒன்றில் மொடல் அழகி ஒருவருக்கு தவறாக முடி வெட்டியதால் இழப்பீடாக 2 கோடி ரூபா வழங்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

டில்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஹொட்டலில் சலூன் வசதியும் உள்ளது.

இந்த ஹொட்டல் சலூனில் 2018 ஆம் ஆண்டு பிரபல மொடல் அழகி ஒருவர் முடி வெட்டுவதற்காக சென்றுள்ளார்.

இவர் நீளமான முடியை விளம்பரப்படுத்தும் ஷாம்பூ விளம்பர படங்களில் நடிப்பவராவார்.

சிகை அலங்கார நிபுணர் நீளமான முடியை குட்டையாக வெட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மொடல் அழகி மனஉளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் விளம்பரப் படங்களிலும் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இழப்பீடாக 2 கோடி ரூபா வழங்க சலூனுக்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...