8 11 scaled
உலகம்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

Share

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

சோறு மற்றும் கறி (Rice and curry), ப்ரைட் ரைஸ் (Fried rice) மற்றும் கொத்து (Koththu) என்பவற்றின் விலை 25 ரூபாயால் குறைக்கப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பரோட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என்றும் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று (16) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் 22.5 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission) அறிவித்துள்ளது.

பொதுமக்கள் மத்தியில் இடம்பெற்ற கருத்தாடல்களை அடுத்தே இந்த குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.

மின்சாரக்கட்டணம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலையும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 6944be9469388
செய்திகள்உலகம்

பங்களாதேஷ் வன்முறை: இந்து இளைஞர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது – முகமது யூனுஸ் அறிவிப்பு!

பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற வன்முறையின் போது இந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவம்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

44539899 pakistan
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு!

பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இலங்கை...

1c8293aa a4fb 4db4 8b17 7ffbf68a26f5 16x9 1200x676
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவின் ‘நிஜ ஹீரோ’: பயங்கரவாதியை வெறும் கைகளால் மடக்கிய அல் அஹமதுவுக்கு $2.5 மில்லியன் பரிசு!

அவுஸ்திரேலியாவின் பாண்டை (Bondi) கடற்கரை பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் போது, தனது உயிரைப்...