இலங்கை
கொத்து உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு
கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை நாளை(01.01.2024) அதிகரிக்கப்படவுள்ளது.
அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
மேலும், தேநீர் மற்றம் பால் தேநீர் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, சாதாரண தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்சான் தெரிவித்துள்ளார்.
மதிய உணவுப் பொதி, ப்ரைட் ரைஸ், கொத்து மற்றும் நாசிகுரான் உள்ளிட்ட உணவுகளின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் நிலையில், பேருந்து கட்டணங்கள், முச்சக்கரவண்டி கட்டணங்கள் உள்ளிட்ட சேவை கட்டணங்களும், தொலைபேசி இணைப்புக்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு இந்த அதிகரிப்புகள் பேரிடியாக காணப்படுகின்றது.