மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகோப் இன்று பிற்பகலில் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
அப்போது அவர், மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது. விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார். முன்னதாக, அவர் மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவை சந்தித்துப் பேசினார்.
நவம்பர் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மலேசியாவில் அப்போது பருவ மழைக்காலம் என்பதால் தேர்தலை நடத்தக் கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
#Malaysia
Leave a comment