டெல்டா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் குறித்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் நாளை அறிவிக்கவுள்ளார் .
தடுப்பூசிகள் செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் அவர் பேசவுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கோடை விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லவுள்ள அதேவேளை வேலைத்தளங்களுக்கு ஊழியர்கள் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றால் ஒரு வாரத்தில், சராசரியாக 1 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்படுகின்றது.
அத்தோடு மருத்துவமனைகளில் கொரோனாத் தொற்றுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஏழு மாநிலங்களில் எப்போதும் இல்லாதவாறு அதிகமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Leave a comment