KIM JONG
உலகம்செய்திகள்

நாடகங்கள் பார்த்த சிறுவர்களுக்கு மரண தண்டனை! – வடகொரியாவில் பயங்கரம்

Share

வடகொரியா அதிபர் கிம்ஜங் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரியா சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இணைய தளத்தை பார்க்க கூட கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. அரசு அனுமதித்த இணைய தளங்களை மட்டுமே பார்க்க முடியும். அரசின் விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டன. இதனால் வெளி உலக தொடர்பு இல்லாமல் அந்நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர்.

ஆனாலும் அதையும் மீறி தென் கொரியா நாட்டில் இருந்து பிளாஸ்டிரைவ் போன்ற கருவிகள் வடகொரியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன. தென்கொரியா நாடகங்களுக்கு வடகொரியாவில் நல்ல மவுசு உள்ளது. இதனால் ரகசியமாக விற்பனை செய்யப்படும் சி.டி.க்களை வாங்கி பொதுமக்கள் பூட்டிய வீட்டுக்குள் அமர்ந்து அந்த நாடகங்களை பார்ப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ரியாய்சங் என்ற மாகாணத்தில் 16 மற்றும்,17 வயது பள்ளி சிறுவர்கள் 2 பேர் சட்ட விரோதமாக தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக கிடைத்த தகவலின் பேரில் வடகொரியா ராணுவத்தினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி சம்பவத்தன்று 2 சிறுவர்களும் பொது மக்கள் முன்னிலையில் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா சமீபகாலமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது ஏதும் அறியாத 2 பள்ளி சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...