மீண்டும் கொரோனா ஊரடங்கு!

download 12

சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் நேற்று முதல் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் மிக தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், 40 லட்சம் பேர் வசிக்கும் பெய்ஜிங்கை சுற்றியுள்ள ஹைபேயி மாகாணத்தில் இந்த வார இறுதி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த மூன்று மாதங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிகாரிகள் கொரோனா கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கையை இரண்டு மடங்கு வேகமாக்கி உள்ளனர்.

#world

Exit mobile version