24 6605b8198caac
உலகம்செய்திகள்

மூன்று தலைநகரங்களை கொண்ட நாடு எது தெரியுமா

Share

மூன்று தலைநகரங்களை கொண்ட நாடு எது தெரியுமா

ஆபிரிக்கக் கண்டத்தின் தென்கோடியில் உள்ள தென்னாபிரிக்கா மூன்று தலைநகரங்களை கொண்டுள்ளது.

நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் குறித்த மூன்று தலைநகரங்களும் பெயரிடப்பட்டுள்ளன.

இதன்படி, கேப் டவுன், பிரிட்டோரியா மற்றும் ப்ளூம்ஃபோன்டைன் ஆகிய நகரங்கள் தென்னாபிரிக்காவின் தலைநகரங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

பல தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளால் தென்னாபிரிக்கா குறிக்கப்படுகிறது.

கடந்த 1910 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா ஒன்றுபட்ட நாடாக உருவாக்கப்படும் போது, அந்தந்த பகுதிகளில் வசித்த மக்கள் தத்தமது பகுதியையே தலைநகராக அறிவிக்க வேண்டும் என போராட்டம் நடந்தியுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் தென்னாபிரிக்கா பரந்துபட்ட நாடாக காணப்பட்டமையும், அதன் ஒட்டுமொத்த பரப்பளவு 1.22 மி.ச.கி.மீ ஆக காணப்பட்டமையும் இதற்கு முதன்மையான காரணிகளாகும்.

ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வெகு தொலைவில் உள்ள தலைநகருக்கு செல்லும் அவசியம் ஏற்பட்டதால் தான் தென்னாபிரிக்காவின் தலைநகரை மூன்றாக பிரித்து வைத்துள்ளனர்.

நாடாளுமன்றம் அமைந்துள்ள இடமாகவும் சட்டமன்ற தலைநகரமாகவும் கேப் டவுன் அமைந்துள்ளது.

இதையடுத்து, அதிபர் மற்றும் அமைச்சரவையின் இடமாகவும் நிர்வாக தலைநகரமாகவும் பிரிட்டோரியா விளங்குகின்றது.
அத்துடன், மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றத்தின் இடமாகவும் நீதித்துறையின் தலைநகரமாகவும் ப்ளூம்ஃபோன்டைன் திகழ்கிறது.

Share
தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...

Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...