corona 2
உலகம்செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – விடுதிகளுக்கு பூட்டு

Share

கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பல நாடுகளுக்கும் தொற்று பரவிய நிலையில் பல நாடுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்தன.

தற்போது தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. எனினும் உருமாறிய கொரோனா வைரசால் தற்போது சில நாடுகளில் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. அந்தநாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உருமாறிய பிஏ.5 வகை தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதனால் அங்கு கடந்த சில நாட்களாக பாதிப்பு 400-ஐ தாண்டி பதிவாகி வரும் நிலையில், தெற்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள மக்காவ் பிராந்தியத்திலும் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் தான் உலகின் மிகப்பெரிய சூதாட்ட விடுதிகள் ஏராளமாக உள்ளன.

இந்நிலையில் தொற்று பரவல் காரணமாக சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மக்காவ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன. இதற்கிடையே பெய்ஜிங் நகரிலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பொதுமுடக்கம் அமுலாக்கப்படலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...