சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவியது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தியும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடியும் ஏற்பட்டது. பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. கொரோனா தடுப்பு மையங்களும் மூடப்பட்டன.
தற்போது பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால் தினசரி பாதிப்புகளும் குறைந்து உள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் காய்ச்சல் கிளீனிக்குகளை திறக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
அதன்படி அங்குள்ள 47 பொது மருத்துவமனைகளில் 14 ஆயிரம் காய்ச்சல் கிளீனிக்குகளும் சமுதாய மருத்துவமனைகளில் 31 ஆயிரம் கிளீனிக்குகளும் திறக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கிளீனிக்குகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.
#world
Leave a comment