கொரோனாவின் தாயகமான சீனாவில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கட்டுப்பாடுகளை முடுக்கிவிட்டுள்ள சீன அரசு, ஷாங்காய் உள்பட பல நகரங்களில் ஊரடங்கையும் அமுல்படுத்தியுள்ளது.
வீடுகளை விட்டு மக்கள் வெளியேற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடைகள், வர்த்தக நிலையங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியன உட்பட டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காவும் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தொற்றுக்குள்ளானவர்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
#World
Leave a comment