1800648 corona1
உலகம்செய்திகள்

தாயகத்தில் மீண்டும் எகிறும் கொரோனா!

Share

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவிதை அடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டது.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன.

இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் இன்று கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றால், அடுத்த மாதம் முதல் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஜனவரி மாதம் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட பயணங்களை அந்நாட்டு மக்கள் மேற்கொள்வார்கள் என்பதால், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஊழியர்களின் பற்றாக்குறையுடன் மருத்துவமனைகள் இயக்கி வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...