ரஷியாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷியாவில் புதிதாக 33,740 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் மேலும் நேற்று மட்டும் 1,015 பேர் கொரோனாவால் சாவடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ரஷியாவில் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை 80,60,752 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 7,94,946 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து 23,426 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 70,40,481 ஆக உயர்ந்துள்ளது.
உலகத்தில் கொரோனாவின் தாக்கம் கடந்த மாதத்தை விட இம் மாதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world

