புலம்பெயர்தல் எதிர்ப்பு ஜேர்மன் அரசியல்வாதி திடீர் மயக்கம்: எழுந்த சந்தேகம்
ஜேர்மனியில் வலதுசாரிக் கட்சியினர் புலம்பெயர்தலுக்கெதிரான கருத்துக்களால் தொடர்ந்து அச்சுறுத்தலை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், கூட்டம் ஒன்றில் பங்கேற்ற வலதுசாரி அரசியல்வாதி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) என்னும் கட்சியின் இணைத்தலைவரான Tino Chrupalla (48) என்பவரே மயங்கி விழுந்தவர் ஆவார்.
நேற்று, பவேரியா மாகாணத்தில் பிரச்சாரம் செய்துவந்த Tinoவுடன் சிலர் செல்பி எடுத்துக்கொண்டிருந்திருக்கிறா
அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tino தாக்கப்பட்டாரா, அல்லது கீழே விழுந்துவிட்டாரா அல்லது உண்மையாகவே உடல் நலமில்லாமல் இருந்தாரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ள பவேரிய பொலிஸ் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட AfD கட்சியை, நான்கு ஆண்டுகளாக Tino தலைமையேற்று நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.