சீன பயணிகள் குழு இலங்கையில்….

China srilanka

கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, சீன சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு இலங்கையை வந்துள்ளது.

இலங்கையின் விசேட விமானம் மூலம் 117 சீன சுற்றுலாப் பயணிகள் நேற்று (01) இரவு இலங்கை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சாங் ஹொங் உள்ளிட்டோர் குழுவை வரவேற்பதற்காக வருகை தந்திருந்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, கொவிட் தொற்றை அடுத்து சீனாவின் சுற்றுலாப் பயணிகள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

3 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முதல், அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று, முதல் முறையாக, சிறப்பு விமானம் இணைக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல், ஸ்ரீலங்கன் மற்றும் சைனா ஈஸ்டன் விமானங்கள் ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் கோங்ஷு ஆகிய மூன்று நகரங்களில் இருந்து வாரத்திற்கு 9 முறை இலங்கைக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version