உலகம்செய்திகள்

இந்தியாவிற்கு பதிலடி வழங்கிய சீன விமானங்கள்! அதிரும் காஷ்மீர் களமுனை

13 9
Share

பாகிஸ்தானின் மீதான இந்தியா மேற்கொண்டுவரும் தாக்குதலுக்கு பதிலடி வழங்கிய பாகிஸ்தான், சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்குள் “பயங்கரவாத” தளங்கள் என்று கூறி இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர், இந்திய ஜெட் விமானங்களை – மூன்று பிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் விமானங்கள், ஒரு mic -29 மற்றும் ஒரு su -30 போர் விமானங்களை – சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் கூற்றுகளுக்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை. எந்த இழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை.

பாகிஸ்தான் ஒரு ரஃபேல் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாகவும், மேலும் ஏதேனும் சுட்டுவீழ்த்தப்பட்டதா என்பது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் அந்நாட்டு உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் உண்மையான எல்லையில் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் 40 முதல் 50 இந்திய வீரர்களைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடைமுறை எல்லையில் உள்ள அவர்களின் (இந்திய) இராணுவ நிறுவல்களை நாங்கள் தகர்த்தெறிந்தோம், என்று பாகிஸ்தானின் சுட்டிக்காட்டியுள்ளது.

புதன்கிழமை அதிகாலை பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் மீது இந்தியா நடத்திய கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து, பதிலடி கொடுப்பதாக அந்நாடு சபதம் செய்துள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள், இந்திய விமானப்படையின் ஐந்து ஜெட் விமானங்களையும், பல ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாகக் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
19 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்.. இந்திய இராணுவம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இந்திய பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடந்த ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து...

17 8
உலகம்செய்திகள்

இந்தியாவின் புதிய யுக்தி! பாகிஸ்தானின் பதில் தாக்குதலை ஏற்கனவே நிறுத்திய நாடு மீண்டும் களத்தில்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபைருடன் அவசர சந்திப்பை...

18 8
உலகம்செய்திகள்

267வது பாப்பரசரானார் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 267ஆவது பாப்பரசராக அமெரிக்காவின் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிகாகோவில்...

16 9
உலகம்செய்திகள்

பூமியை அதிர வைக்கும் அறிவிப்பு! ட்ரம்பின் அறிவிப்பால் அச்சத்தில் உலக நாடுகள்

பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி...