tamilni 280 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவிற்கு எதிராக சீனாவின் நகர்வு : பென்டகன் எச்சரிக்கை

Share

இந்தியாவிற்கு எதிராக சீனாவின் நகர்வு : பென்டகன் எச்சரிக்கை

எப்போதும் இல்லாதவாறு இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் சீனா தனது இராணுவ பலத்தை அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு துறை தலைமையகமான பென்டகன் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றினையும் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.

சுமார் 03 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் சீனா மேற்கொண்ட நில ஆக்கிரமிப்புக்களினை எதிர்த்து, இந்தியாவின் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து சீனாவுடன் மோதல்கள் இடம்பெற்றது இந்த மோதலில் 19 இராணுவ வீரர்கள் வரை வீரமரணம் அடைந்தனர்.

இந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் 20 முறை இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளன.

அண்மையில் கடந்த 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற 20-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது எல்லைகளில் இருக்கும் பாதுகாப்பு படைகளை கணிசமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு இரு தரப்பும் வந்தன.அதேபோல் எல்லைகளில் இருந்த படைகளை கணிசமாக விலக்கியும் இருந்தன.

இவ்வாறிருக்கையில் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றினை அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் சீனா குறித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் இந்தியாவையும் அமெரிக்காவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் 500 அணு ஆயுதங்களை செயல்படும் நிலையில் சீனா வைத்துள்ளது என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் சீனாவிடமுள்ள அணு குண்டுகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 2022 ஆம் ஆண்டில் புதிதாக 3 ஏவுகணைத் தளங்களை சீனா கட்டி முடித்துள்ளது என்றும் இந்த ஏவுகணை தளங்களில் 300 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஏவுகணைகளுக்கு 5,500 கி.மீ. தொலைவுக்கு சீனா இலக்குகளையும் நிர்ணயித்துள்ளது, இது அமெரிக்காவுக்கும் பேராபத்தாக அமையும்.

மேலும் மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, நைஜீரியா, நமீபியா, மொசாம்பிக், பங்களாதேஷ், பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் இராணுவ தளங்களை அமைக்கவும் சீனா மும்முரம் காட்டி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல் கடந்த ஆண்டு (2022) 340 போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருந்த சீனா தற்போது அந்த எண்ணிக்கையினை 370 இற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, 2030 ஆம் ஆண்டுக்குள் இதனை 435 ஆக அதிகரிக்கவும் சீனா திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தாய்வானை முற்றாக ஆக்கிரமித்து கைப்பற்றும் நோக்கத்தில் சீனாவின் முப்படைகளும் முழு வீச்சில் களமிறங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல் இந்தியாவின் லடாக் கல்வான் பள்ளத்தாக்கு, பான்காங் ஏரி பகுதிகளிலும் பூட்டானின் டோக்லாம் பீடபூமி பகுதியிலும் சீனா தனது இராணுவ நடவடிக்கையினை அதி தீவிரப்படுத்தியுள்ளதாகவும், புதிதாக போர் விமான தளங்கள், இராணுவ ஹெலிகாப்டர் தளங்கள்,இராணுவ குடியிருப்புகளை சீனா கட்டமைத்துள்ளதாகவும் பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் ஏற்கனவே இராணுவ மோதல் நிகழ்ந்து பெரும் போர் பதற்றம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தையினை நடத்திக் கொண்டே இத்தகைய இராணுவ நடவடிக்கைகளை சீனா தீவிரமாக்கியிருப்பது இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக டில்லி ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...