உலகின் எந்த முளைக்கும் இருபது நிமிடங்களில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய பலிஸ்டிக் ஏவுகணையை ஏவும் திறன் தங்களுக்கு இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
எனவே, சீனா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பேரழிவு நிச்சயம் என சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் காவ் எச்சரித்துள்ளார்.
மேலும், தங்கள் தரப்பு எப்போதும் முதல் தாக்குதலை நடத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சீனா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு எனவும் அதன் மீது எந்த நாடும் போர் தொடுக்க வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற வருடாந்திர வெற்றி தின அணிவகுப்பின் போது, அந்நாடு தனது இராணுவ பலத்தை உலகுக்கு காட்டியிருந்தது.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.