சீனாவின் அதிகாரம்மிக்க தலைவராக அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பின் வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி தனது மூன்றாவது தவணைக்கான பதவிக் காலத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய திகதியில் சீன கம்யூனிஸ் கட்சியின் 20ஆவது மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போது அவர் தனது பரந்த கொள்கைத் திட்டத்தை கொங்கிரஸுக்கு முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் உள்நாட்டு கடல்சார் திட்டம், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற முன்னணி அண்டை நாடுகள், அமெரிக்காவுடனான இறுக்கமான உறவு தொடர்பில் சீனாவின் அதிகாரத் திட்டங்கள் பற்றி தீர்மானிக்கப்படும்.
#world
Leave a comment