tamilni 174 scaled
உலகம்செய்திகள்

தாமரை வடிவிலான புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா

Share

தாமரை வடிவிலான புதிய வானியல் செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.

ஐன்ஸ்டீன் புரோப் (EP)என்ற இந்த செயற்கைக்கோள், லாங் மார்ச்-2சி என்ற ராக்கெட் மூலம் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்ரே கண்டறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த செயற்கைக்கோள், வானியல் நிகழ்வுகளை படம்பிடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபஞ்சத்தில் வாணவேடிக்கைகளைப் போல ஒளிரும் மர்மமான நிலையற்ற நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக இந்த செயற்கைக் கோள் சுமார் 1.45 டன் எடை கொண்டது.

மலர்ந்த தாமரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை கோலில் 12 இதழ்கள் மற்றும் இரண்டு மகரந்த தண்டுகள் போன்ற அமைப்புகள் உள்ளதுடன் அதில் 12 இதழ்களும் நீண்ட தொலைவை கண்காணித்து படம் பிடிக்கும் எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் கொண்ட 12 தொகுதிகளாகும்.

தாமரை வடிவிலான புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா | China Launches New Satellite

இதேவேளை இரண்டு தண்டுகள் போன்ற அமைப்பில் குறுகிய தொலைவை கண்காணிக்கும் எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் உள்ளன.

இந்த பூமியையும் தாண்டி விண்வெளியில் நடைபெறும் வித்தியாசமான பல நிகழ்வுகளை கண்காணிப்பதே இதன் முக்கிய நோக்கம் என சீன விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...