பிலிப்பைன்ஸில் ராய் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
சுமார் 7 கோடியே 54 இலட்சம் ரூபாய் நிதியும், 4 ஆயிரத்து 725 தொன் அரிசியையும் சீனா வழங்கியுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் சீனா உதவியிருப்பதாக பிலிப்பைன்ஸ் தேசிய வள மற்றும் சரக்கு மேலாண்மை அமைப்பின் இயக்குநர் இம்மானுவேல் ப்ரிவாடோ சீனாவுக்கு நன்றி கூறியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சூறையாடிய ராய் புயலால் சுமார் 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#SrilankaNews