அப்பாக்கள் வாடகைக்கு! கஷ்டப்படும் பெண்களுக்காக வந்த வசதி!
உலகம்செய்திகள்

அப்பாக்கள் வாடகைக்கு! கஷ்டப்படும் பெண்களுக்காக வந்த வசதி!

Share

அப்பாக்கள் வாடகைக்கு! கஷ்டப்படும் பெண்களுக்காக வந்த வசதி!

எதையும் வாடகைக்கு விடக்கூடிய காலத்தில் வாழ்கிறோம். இப்போது தனியாக பிள்ளைகளை கவனித்துக்கொள்ளமுடியாமல் அவதிப்படும் தாய்மார்களுக்காக தந்தையும் வாடகைக்கு கிடைக்கின்றனர்.

தாய்மார்கள் தங்களுடைய நேரத்தைச் சொந்தமாக கொண்டாடுவதற்காக ‘Rent-a-Dad‘ எனும் வித்தியாசமான முயற்சியை சீன குளியல் இல்லம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது முக்கியமாக மகன்களுடன் வரும் பெண் விருந்தினர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வசதியாகும்.

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங்கில் உள்ள ஒரு குளியல் இல்லம் இந்த வசதியை வழங்குகிறது.

ஆண்களை அனுமதிக்க முடியாத பெண்களுக்கான பிரத்யேக பகுதிகளில், மகன்களைக் கொண்ட தாய்மார்கள் மற்றும் ஒற்றைத் தாய்மார்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு பெண் தன் மகனுடன் இங்கு வந்தால், அப்பெண் தனது மகனை வாடகை தந்தை என அழைக்கப்டும் அந்த நபரிடம் ஒப்படைத்துவிட்டு, சுதந்திரமாக நீச்சல் குளத்தில் நீராடவும், பெண்களுக்கான மற்ற சேவைகளை கவலையில்லாமல் அனுபவிக்கவும் முடியும். அந்த வாடகை அப்பா அதுவரை உங்கள் மகனை பிள்ளைபோல் பார்த்துக்கொள்வார், அவனை ஆண்களுக்கான குளியல் பிரிவிற்கு அழைத்துச்செல்வார் என அந்த குளியல் இல்லம் கூறுகிறது.

குழந்தைகளைக் கவனிக்கக் கிடைக்கும் ஆண்கள் அதற்கான சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கிறார்களா, எந்த வயது வரை குழந்தைகளைக் கவனிக்கிறார்கள் என்று குளியல் இல்லம் குறிப்பிடவில்லை.

பொதுவாக சீன குளியல் இல்லங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பகுதிகள் உள்ளன. அதன்பிறகு ஆண்களும் பெண்களும் ஒன்றாகச் சாப்பிடுவது போன்ற வசதிகள் உள்ளன.

இருப்பினும், இந்த Rent a Dad பற்றிய விவாதங்களும் நடந்து வருகின்றன. இது பெண்களுக்கு மிகவும் வசதியானது என்று சிலர் கூறுகிறார்கள், மற்றவர்கள் இளம் குழந்தைகளை வேறொருவரிடம் எப்படி ஒப்படைக்க முடியும் என்று கூறுகிறார்கள்?

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 6914c3f00b61f
செய்திகள்அரசியல்இலங்கை

நுகேகொடையில் நவம்பர் 21 பேரணி: அரசாங்கத்தின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நினைவூட்டவே இந்த ஆர்ப்பாட்டம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்க எதிர்ப்புப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு அளித்த...

25 690c62aa700e2
செய்திகள்இலங்கை

பேலியகொட நகரசபை உறுப்பினரின் அதிபர் கணவர் 2 கிலோ ஹெரோயினுடன் கைது: நவம்பர் 26 வரை விளக்கமறியலில் நீதிமன்று உத்தரவு!

பேலியகொட நகரசபை உறுப்பினரின் அதிபர் கணவர், சுமார் 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...

selvam adaikalanathan 8
செய்திகள்அரசியல்இலங்கை

வனப் பாதுகாப்பு திணைக்களங்களின் மோசமான செயலால் – செல்வம் அடைக்கலநாதன்!

கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டம் (பாதீடு) சிறப்பானது என்று தாம் கூறியது தவறு என்பதைத் தற்போது...

28120819 14
இலங்கைசெய்திகள்

வீதி விளக்குக் கட்டணம்: கொழும்பு உள்ளிட்ட பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியுள்ளன – எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி!

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள், வீதி விளக்குகளுக்கான மின்சாரக்...