தென்னாப்ரிக்காவில் கொரோனா குழந்தைகளை அதிகமாக தாக்கி வருகிறது.இதனால் தென்னாப்ரிக்க மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தென்னாப்ரிக்காவில் ஒமிக்ரொன் எனப்படும் பல மடங்கு உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் அங்கு 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கும், நாள்தோறும் கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை, தென்னாப்ரிக்காவில் புதிதாக 16,055 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 25 பேர்சாவடைந்துள்ளனர்.
கடந்த கால கொரோனா பேரிடர்களின்போது, பொதுவாகவே குழந்தைகளுக்கு அதிகமாககொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
அதுபோலவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அளவும் அதிகரிக்கவில்லை.
ஆனால், தற்போதைய கொரோனா அலையில், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கும், 15 முதல் 19 வயதுடைய இளைஞர்களுக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது, நான்காவது அலை உருவாகுமோ என்ற நிலையில், அனைத்து தரப்பு வயதினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு என்று தேசிய தொற்றுநோய் மையத்தின் வைத்தியர் வாஸிலா ஜஸ்ஸத் தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோரில் மிக அதிகமாக இருப்பது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளே, அடுத்தபடியாகத்தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
இதுவரை நாம் பார்த்த காட்சிகளுக்கு நேரெதிரான நிலை தற்போது உருவாகியுள்ளது. இதுபோன்ற நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த அலையின் ஆரம்பத்தில் தற்போது இருக்கிறோம். தற்போதைய நிலையில், குழந்தைகளுக்கான வைத்தியசாலையில் படுக்கைகளை அதிகரிப்பது மற்றும் ஊழியர்களை அதிகரிப்பதுதான் அவசியம் என்று தெரிகிறது என்கிறார்கள்.
அத்தோடு ஒருபக்கம் ஒமிக்ரொனும் உலகை முடக்கிய வண்ணம் உள்ளது.
#WORLD
Leave a comment