23 649bf9d9d329c
உலகம்

புற்றுநோய்க்கு தடுப்பூசி விரைவில் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தகவல்

Share

அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாமென அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்று நோய் மையம், புற்று நோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தடுப்பூசிக்கான ஆராய்ச்சி தற்போது மிகப்பெரிய திருப்பு முனையை எட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருப்புமுனை

இதுதொடர்பில், சியாட்டில் புற்றுநோய் மையத்தின் மூத்த விஞ்ஞானியான டொக்டர் ஜேம்ஸ் குல்லி தெரிவிக்கையில்,

“புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும்.

பல ஆண்டுகளாக வரையறுக்கப்பட்ட வெற்றிக்கு பிறகு, தடுப்பூசி சிகிச்சையை உருவாக்கும் ஆராய்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளோம்.

அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாம். இவை நோயைத் தடுக்கும் பாரம்பரிய தடுப்பூசிகள் அல்ல.

மாறாக புற்றுநோய் கட்டிகளை சுருக்கவும், புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்க உதவும் தடுப்பூசிகளாக இருக்கும்” என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...

Murder Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் 38 பேர்...