1797655 arrested 1
உலகம்செய்திகள்

கனடா ராப் பாடகருக்கு சீனாவில் 13 ஆண்டு சிறை!

Share

கனடா மற்றும் சீனா இடையிலான உறவு சமீபகாலமாக மோசமடைந்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடிக்கிறது.

இதன் காரணமாக சீனாவில் கனடா நாட்டை சேர்ந்தவர்களும், கனடாவில் சீனர்களும் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது.

இந்த நிலையில் சீனாவில் கனடாவை சேர்ந்த பிரபல ராப் பாடகருக்கு கற்பழிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிரிஸ் வூ என்கிற 32 வயதான ராப் பாடகர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார். தலைநகர் பீஜிங்கில் உள்ள சாயோயாங் மாவட்ட கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

நேற்று இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, கிரிஸ் வூ மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார்.

தொடர்ந்து இந்த வழக்கில் கிரிஸ் வூக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த விவகாரம் குறித்து கனடா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...