13 42
உலகம்செய்திகள்

5 நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள கனேடிய அரசு

Share

கனேடிய(Canada) அரசு நான்கு கரீபியன் நாடுகள் மற்றும் மெக்சிகோவிற்கு செல்வதற்கு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

கனடா அரசு கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் மெக்சிகோவிற்கும் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

வன்முறை, குற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலேயே இந்த பயணஎச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கியூபாவில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாடு மற்றும் அடிப்படை தேவைகளின் குறைபாடுகள் காரணமாக கனடா அரசு பயணிகளுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இங்கு பல்வேறு குற்றங்கள், குறிப்பாக செல்வச்சின்னங்கள் அல்லது விலைமதிப்புள்ள பொருட்களை வெளிப்படையாக காட்சிப்படுத்துவதால் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக உள்ளன.

குறிப்பாக சுற்றுலா பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு, வன்முறை குற்றங்கள் தீவிரமாக நடைபெறுகின்றன.

ஜமைக்காவில் வன்முறை குற்றச்செயல்கள் அதிகமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சில பகுதிகளில் அரசால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிக உரிமைகளுடன் செயல்படுகின்றனர்.

பஹாமாஸ் தீவுகளின் சில பகுதிகளில் கொள்ளை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகமாக உள்ளன.

சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் தனியாக செல்லாமல், பாதுகாப்பான சுற்றுலா பகுதிகளில் மட்டுமே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் கடத்தல்கள் மற்றும் வன்முறை அதிகமாக உள்ளதால் கனடா அரசு பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய சாலைகளில் ஆயுதக் குழுக்கள் வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாடுகளுக்கான பயண திட்டங்களை கவனமாக மதிப்பீடு செய்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுமாறு கனடா அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...