24 66637d13aaf6d
உலகம்செய்திகள்

இந்தியா மீது கனடா பகிரங்க குற்றச்சாட்டு

Share

இந்தியா மீது கனடா பகிரங்க குற்றச்சாட்டு

கனடாவுக்கு (Canada)அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியா என கனடா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனேட்டர்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பு (National Security and Intelligence Committee of Parliamentarians – NSICOP), வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தியா மீது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களில் தலையிடுதல், கனேடிய அரசியல்வாதிகள், இன அடிப்படையிலான ஊடகங்கள் மற்றும் இந்திய – கனேடிய கலாச்சார சமுதாயங்களை குறிவைத்தல் ஆகிய விடயங்கள் மூலம் இந்தியா இந்த செயல்களைச் செய்வதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனடாவின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களில் தலையிடுவதன் மூலம் இந்தியா கனடாவின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டாவது நாடாக மாறியுள்ளது என NSICOPஇன் அறிக்கை அறிவித்துள்ளது.

கனேடிய ஜனநாயகத்தின் முதல் அச்சுறுத்தலாக சீனா விளங்குவதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை, இரண்டாவது இடத்தில் முன்பு ரஷ்யா இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த அறிக்கைக்கு இந்திய தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...