tamilni Recovered 2 scaled
உலகம்செய்திகள்

கனடா- இந்தியா மோதல்: உற்றுநோக்கும் உலக நாடுகள்

Share

கனடா- இந்தியா மோதல்: உற்றுநோக்கும் உலக நாடுகள்

கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான மோதல், மேற்கத்திய நாடுகளில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த மோதல், பிற சர்வதேச உறவுகளை பாதித்துவிடக்கூடாது என்பதை உறுதிசெய்வதற்காக மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும், அலுவலர்களும் கடும் முயற்சி மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா வளர்ந்துவரும் ஒரு வல்லரசு நாடாகக் கருதப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றில் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்க, இளைஞர்கள் எண்ணிக்கையோ குறைவாக உள்ளது. ஆனால், இந்தியாவின் மக்கள்தொகையில் பாதி பேர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.

அதாவது, அடுத்த பல பத்தாண்டுகளுக்கும், இந்தியாவில் பணி செய்யும் வயதுடையோர் போதுமானவர்கள் இருப்பார்கள். உலக அரங்கில் இது ஒரு பலமாக கருதப்படுகிறது.

அடுத்தபடியாக, சீனாவிடமிருந்து மேற்கத்திய நாடுகளை பாதுக்காக்கும் ஒரு தடுப்புச்சுவராகவும் இந்தியா மேற்கத்திய நாடுகளால் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்தியாவில் நடந்த G20 உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை, ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிட்டு அதை கண்டிக்காத நிலையிலும், உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகள், அந்த அறிக்கையை ஒப்புக்கொண்டபோது, இந்தியாவுக்கு மேற்கத்திய நாடுகள் கொடுக்கும் முக்கியத்துவம் அதில் வெளிப்படையாகத் தெரிந்தது.

இந்த அறிக்கையின் மீதான சர்ச்சையைத் தவிர்ப்பதன் மூலம் இந்தியாவுடனான தங்கள் உறவைப் பாதுகாப்பதை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். இது உக்ரைன் தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

கனடா இந்திய பிரச்சினையில் மேற்கத்திய நாடுகள் தலையிட அஞ்சுவதற்கு மற்றொரு காரணம், கனடா ஆதரவு நாடுகள், இந்தியா ஆதரவு நாடுகள் என உலக நாடுகள் பிரிந்துவிடக்கூடாது என்ற அச்சமும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கு உள்ளது.

ஏற்கனவே, பிரேசில், இந்தோனேசியா, சீனாவுடன், இந்தியா தெற்கு உலகம் (The Global South) என அழைக்கப்படும் நிலையில், கனடா இந்திய பிரச்சினையால், வடக்கு தெற்கு என்னும் சர்ச்சை உருவாகிவிடக்கூடாது என அவர்கள் கருதுகிறார்கள்.

ஆக, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அது தொடர்பாக துவக்கப்பட்டுள்ள விசாரணையை உலக நாடுகள் உற்றுக் கவனித்துவருகின்றன.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...