புதிய கொரோனாவின் தாக்கம் காரணமாக பிரிட்டன் 6 நாடுகளுக்கான விமானசேவையை நிறுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரசின் பரவுதலும் அதன் வீரியமும் மிகவும் அதிகமாக உள்ளதால் பிரிட்டன் இம்முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இவ் வைரசானது அதிக பாதிப்பை உலகில் ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இவ் வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இவ் வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும்வகையில் பிரிட்டன் அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆகிய தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு நிறுத்தியுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருமென அறிவித்துள்ளது.
அத்தோடு அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment