இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக மாறியுள்ளன.
விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகள் போன்றவைகளிலிருந்து நாட்டை காக்கும் இந்த அமைப்புகள் உலகின் பல முன்னணி நாடுகளால் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இவை ரேடார் தொழில்நுட்பத்தைக் கொண்டு எதிரி விமானங்களை, ஏவுகணைகளை, ட்ரோன்களை கண்டறிந்து, அவற்றை அழிக்க Surface-to-Air Missiles மூலமாக செயல்படும் பாதுகாப்பு அமைப்புகள் ஆகும். இது ஒரு நாட்டின் வானத்தில் எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1- S-400 Triumph (ரஷ்யா):
ரஷ்யாவின் S-400 Triumph உலகின் மிக உயர்தர பாதுகாப்பு அமைப்பாகக் கருதப்படுகிறது. 400 கி.மீ ரேஞ்ச் மற்றும் 56 கி.மீ உயரம் வரை எதிரிகளை தாக்க முடியும். இந்தியாவும் இந்த அமைப்பை சுதர்சன சக்ரா எனச் செயல்படுத்தி வருகிறது.
2- David’s Sling (இஸ்ரேல்):
இஸ்ரேலின் David’s Sling 70-300 கி.மீ வரை எதிரிகளை துல்லியமாகத் தாக்கும் திறனுடையது. இது Iron Dome மற்றும் Arrow இடையே உள்ள இடைவெளியை நிரப்புகிறது.
3- S-300VM (ரஷ்யா):
ரஷ்யாவின் S-300VM 200 கி.மீ ரேஞ்ச் மற்றும் 30 கி.மீ உயரத்தில் குறுகிய மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை என பலவகை ஏவுகணைகளை எதிர்த்து அழிக்கக்கூடியது.
4- THAAD (அமெரிக்கா):
அமெரிக்காவின் THAAD 200 கி.மீ வரை குறிவைக்கும் மற்றும் 150 கி.மீ உயரத்தில் எதிரிகளை தாக்கும் திறன் கொண்டது. அதிகமான சோதனைகளில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.
5- MIM-104 Patriot (அமெரிக்கா):
அமெரிக்காவின் MIM-104 Patriot 170 கி.மீ வரை ஏவுகணைகள் மற்றும் விமானங்களை அழிக்கக்கூடிய, இது பெரும்பாலான போர்களுக்கு இடையே பயன்படுத்தப்பட்ட பரிசோதனை செய்யப்பட்ட அமைப்பு ஆகும்.
6- HQ-9 (சீனா):
சீனாவின் HQ-9 ரஷ்யாவின் S-300 போன்றது, 125 கி.மீ வரை பயணிக்கும், 27 கி.மீ உயரம் வரை எதிரிகளை தாக்கும் திறனுடன் கூடியது. இது விமானங்கள், யுஏவிகள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது.
7- Aster 30 SAMP/T (பிரான்ஸ்/இத்தாலி):
120 கி.மீ வரை எதிரிகளை தாக்கக்கூடிய, தியேட்டர்-மட்ட பாதுகாப்பு அமைப்பு ஆகும். இது பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.
8- MEADS (USA/Germany/Italy):
MEADS 360 டிகிரி பாதுகாப்புடன் கூடிய சாலையில் நகரக்கூடிய அமைப்ப்பாகும். இது 70 கி.மீ ரேஞ்ச், 20 கி.மீ உயரத்தில் தாக்கும் திறன் கொண்டது.
9- Barak-8 (இஸ்ரேல்/இந்தியா):
இஸ்ரேல் மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சியான Barak-8, 70-100 கி.மீ ரேஞ்ச், ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் கப்பல் எதிரிகளை தாக்கும் திறனுடன் 360 டிகிரி பாதுகாப்பை வழங்கக்கூடியது.
10- Iron Dome (இஸ்ரேல்):
இஸ்ரேலின் Iron Dome குறுகிய தூரத்திற்கு (70 கி.மீ) மிக உயர் வெற்றிப் பதிவுடன் தாக்குதல் செய்யக்கூடியது. நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பாக விளங்குகிறது.