26 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ள பலுசிஸ்தான்

Share

பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்தநிலையில் அந்த பிராந்திய மக்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக உரிமை மீறல் அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.

பலுசிஸ்தானின் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அரசு அலுவலகங்களில் பாகிஸ்தானிய கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர்.

அத்துடன் தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும்படி, இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் பலுசிஸ்தான்களின் பிரதிநிதியான மிர் யார் பலோச் என்பவர், பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். எனவே ஊடகங்கள் பலுசிஸ்தானை பாகிஸ்தானின் அங்கமாக குறிப்பிடவேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பலுசிஸ்தானில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். இனி பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கு சொந்தமானது அல்ல என்பது அவர்களின் முடிவாகும்.

எனவே இனிமேல் உலகம் அமைதியாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு சக்திகள் உதவியுடன் வலுக்கட்டாயமாகவே பலுசிஸ்தானை பாகிஸ்தான் இணைத்துக்கொண்டது என்றும் பலுசிஸ்தான்களின் பிரதிநிதியான மிர் யார் பலோச் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...