tamilni Recovered 3 scaled
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவின் முதல் இந்திய வம்சாவளி செனட்டர்., பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம்

Share

அவுஸ்திரேலியாவின் முதல் இந்திய வம்சாவளி செனட்டர்., பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம்

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் புதிய செனட்டராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரிஸ்டர் வருண் கோஷ் (Varun Ghosh) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவுலியேற்ற முதல் செனட்டரும் இவரே.

இந்நிலையில், அவுஸ்திரேலிய செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற சாதனையை வருண் கோஷ் படைத்துள்ளார்.

வருண் கோஷ் 1985-இல் இந்தியாவில் பிறந்தார். 1997-இல் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து, பெர்த் கிறிஸ்ட் சர்ச் இலக்கணப் பள்ளியில் பயின்றார்.

பின்னர் பெர்த் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றார். தனது 17வது வயதில் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார்.

பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காமன்வெல்த் சட்ட அறிஞர் ஆனார். அதே சமயம் கட்சியிலும் தீவிரமாக இருந்தார்.

அவர் முன்பு நியூயார்க்கில் நிதி வழக்கறிஞராகவும், வாஷிங்டனில் உலக வங்கியின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

உடல்நலக் காரணங்களால் ஓய்வு பெறும் செனட்டர் பேட்ரிக் டாட்சனுக்குப் பதிலாக வருண் கோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் பயிற்சி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று வருண் கூறினார்.

இதற்கு முன் உலகின் பல தலைவர்களும் பகவத் கீதையின் மீது கைவைத்து நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரியில், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் முதல் இந்திய-அமெரிக்க லெப்டினன்ட் கவர்னர் அருணா மில்லர் (Aruna Miller) பகவத் கீதை மீது கை வைத்து பதவிப் பிரமாணம் எடுத்தார்.

பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) பகவத் கீதையில் கையை வைத்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அதாவது ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் எம்பியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...