24 663bd1be544f4
உலகம்செய்திகள்

சவுதி இளவரசர் மீது தாக்குதல் முயற்சி: பெரும் பரபரப்பு

Share

சவுதி இளவரசர் மீது தாக்குதல் முயற்சி: பெரும் பரபரப்பு

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை(Mohammed bin Salman Al Saud) கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறித்த விடயமானது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் மொசாட் ஆயுதப்படை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில்,

” ரியாத்தில் உள்ள அறிக்கை… பின் சல்மான் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பினார்” என பதிவொன்றை மேற்கொண்டுள்ளது.

எனினும் சவுதி தரப்பில் இருந்து இது தொடர்பிலான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ”Open-source intelligence defender என்ற அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில்,

” சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான படுகொலை முயற்சி தொடர்பாக இன்றிரவு செய்யப்பட்ட “உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள்” முற்றிலும் தவறானவை.

நகரத்திற்குள் அல்லது அதற்கு அருகில் இன்றிரவு எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை.

தெற்கு காசாவில் இஸ்ரேலிய தரைப்படை நடவடிக்கை தொடங்கும் வேளையில் தாக்குதல் தொடர்பான ஆரம்ப பதிவுகள் மத்திய கிழக்கு ஊடக ஆதாரங்களை இலக்காகக் கொண்டதாகத் தெரிகிறது.” என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...