26 695cd23d3691d
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் 50% குறைந்த புகலிடக்கோரிக்கைகள்: கடுமையான சட்டங்களே காரணம் என உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் அறிவிப்பு!

Share

ஜேர்மனியில், 2025ஆம் ஆண்டில் புகலிடக்கோரிக்கைகள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.

2025ஆம் ஆண்டிலோ, புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை 113,236 மட்டுமே. 2024ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.

மேயர் குற்றச்சாட்டுஎல்லையிலேயே புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புதல், குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு, விரைவு குடியுரிமை விண்ணப்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது மற்றும் புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புதல் என தனது புலம்பெயர்தல் கொள்கைகளை கடுமையாக்கிவருகிறது ஜேர்மனி அரசு.

ஆக, ஜேர்மனியின் கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளே புகலிடக்கோரிக்கைகள் எண்ணிக்கை வீழ்ச்சியடையக் காரணம் என ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt) தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் புலம்பெயர்தல் கொள்கை மாறியுள்ளது என்னும் விடயம் மீதமுள்ள உலகின் பாகங்களை எட்டியுள்ளது என்பதற்கு, ஜேர்மனியிலிருந்து வெளியாகியுள்ள தெளிவான அறிகுறி இது என்று கூறியுள்ளார் அவர்.
பாதுகாப்புக் கோராதவர்கள் ஜேர்மனிக்கு வரக்கூடாது, குற்றவாளிகளாக மாறினவர்கள் ஜேர்மனியிலிருந்து வெளியேறவேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர்.

 

 

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...