24 66328e70e8674
உலகம்செய்திகள்

இஸ்ரேல் காசாவின் ரஃபா நகரை தாக்குவது உறுதி : நெதன்யாகு திட்டவட்டம்

Share

இஸ்ரேல் காசாவின் ரஃபா நகரை தாக்குவது உறுதி : நெதன்யாகு திட்டவட்டம்

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரை நிச்சயமாக தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) திட்ட வட்டமாக கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தைகள் தொடர்கிறதோடு, இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், இஸ்ரேலியப் படைகள் ஹமாஸை முடிவுக்குக் கொண்டுவர ரஃபாவிற்குள் நுழையும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ரஃபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பணயக்கைதிகளை விடுவிக்கவும், ஓரளவு நிவாரணம் பெறவும், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆனால் ‘எங்கள் இலக்குகளை அடையாமல் போரை நிறுத்துவதில் உடன்பாடு இல்லை. நாங்கள் ரஃபாவில் நுழைகிறோம். ஹமாஸ் படைகளை முற்றாக அழிப்போம்” என நெதன்யாகு உறுதிப்படக் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...