ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் 11 பேர் ஆற்றில் மூழ்கி சாவடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்குகள் ஆண்டு தோறும் ஏற்படுகின்றன.
இதில் பல நூற்றுக்கணக்கானோர் சாவடைகின்றனர் .
வெள்ளத்தில் அடித்து வரப்படும் குப்பை கூழங்கள் ஆறுகளில் தேங்குவதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.
இதன் காரணமாக இந்தோனேசியாவில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் வெள்ளம் வடிந்த பிறகு, ஆறுகளில் தேங்கிய குப்பைகூழங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந் நிலையில் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சியாமிஸ் நகரில் உள்ள உயர்நிலை பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் அங்குள்ள சிலியூர் ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாடசாலையின் ஆசிரியர்களின் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வேளையில் மாணவர்களில் சிலர் ஆற்றில் இருந்த பாறைகள் வழியாக ஆற்றை கடக்க முயன்றனர்.
21 மாணவர்கள் ஒருவரின் கையை ஒருவர் பிடித்தவாறு பாறையில் நடந்து சென்றனர்.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென கால் சறுக்கி ஆற்றுக்குள் விழுந்தார்.
அவரை தொடர்ந்து மற்றய 20 மாணவர்களும் அடுத்தடுத்து ஆற்றுக்குள் விழுந்தனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது .
கரையில் நின்று கொண்டிருந்த சக மாணவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் ஆற்றில் மூழ்குவதை கண்டு பதறினார்கள்.
மாணவர்களின் சத்தம் கேட்டு அங்குள்ள மக்கள் ஆற்றுக்குள் இறங்கி மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் சம்பவம் குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் படகுகளை பயன்படுத்தி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் தேடியும் 11 மாணவர்களைசடல மாகத் தான் மீட்க முடிந்துள்ளது .
அதே சமயம் 10 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்ட அவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.
மேலும் ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் 11 பேர் ஆற்றில் மூழ்கி சாவடைந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.
Leave a comment