1729639 ukraine123
உலகம்செய்திகள்

உக்ரைன் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்! – குழந்தைகள் உட்பட பலர் உயிரிழப்பு

Share

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 5 மாதங்களை கடந்துவிட்டது. ஆனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டன.

இருந்தபோதிலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்து போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களை பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது.

இந்தநிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்வில் இருந்து 268 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மத்திய பகுதியான வினிட்சியா நகரில் நேற்று ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. அங்குள்ள முக்கிய அரசு அலுவலக கட்டிடம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கட்டிடம் மட்டும் அல்லாமல் அருகில் இருந்த குடியிருப்பு கட்டிடங்களும் கடுமையாக சேதம் அடைந்தது.

இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 23 அப்பாவி பொதுமக்கள் இறந்தனர். 90-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அடுத்தடுத்து 8 தடவை நடந்த ஏவுகணை வீச்சில் 50-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் வாகனங்கள் தீயில் கருகி சேதம் ஆனது. நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 5 பேர் இறந்தனர். ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...